Sunday, March 2, 2008

மிரட்டலான வெற்றி!

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி எடுத்த படங்களே கவிழ்ந்து போய்விடுகின்ற தமிழ் சினிமாவில் வெறும் 2 லட்சம் ரூபாவில் எடுக் கப்பட்ட ஒரு 90 நிமிடபடம் திரைக்கு வராமலேயே சக்கை போடு போடுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா? எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தகவலியல் (Visual communication), மின்னணு ஊடகவியல் (Electronic media) துறைகள் இணைந்து இதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.

1970களில் அமெரிக்காவில் ஜேன் வெய்ன் கீஸ் என்ற தொடர் கொலைகாரன் 33 பேரைக் கொன்றான். அவன் ஓரினச் சேர்க்கையாளன். இளை ஞர்களை தந்திரமாக அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத் திய பின்னர் கொல்வது அவன் பாணி. அந்த உண்மைக் கதையை மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர்இ இன்றைய காலத்துடன் ஒன்றிப் போகக்கூடியதாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பாலியல் பற்றிப் பேசுவதற்கே பயப்படும் ஒரு சமூகத்தின் மத்தியில் அப்படிப் பேசுவதை குற்றமாகக் கருதும் மக்கள் மத்தியில் ஓரினச் சேர்க்கை பற்றிப் பேசுவதற்கு அசாத்திய துணிவு வேண்டும். அந்தத் துணிவுடன் அதை எதிர்கொண்டு விறுவிறுப்பான ஒரு துப்பறியும் கதையைப் படமாக்கி இருக்கிறார்கள்.

வங்கியில் கொள்ளையடிக்க முயலும் நான்கு பேரை சுட்டுக் கொல்லும் அதிரடியான காவல்துறை அதிகாரியின் அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறது படம். சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த அந்த அதிகாரியின் தான்தோன் றித்தனமான நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தாலும் அவரது திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் உயர் அதிகாரிகள்.

சென்னையில் திடீரெனக் இளைஞர்கள் தொடர்ந்து காணாமல் போ­வது பற்றிய விவகாரம் இந்தக் தனிப்படையிடம் விசாரணைக்காக ஒப் படைக்கப்படுகிறது. வழக்கமான தமிழ் சினிமாவின் பழிவாங்கல்இ அடிதடிஇ 'ஹீரோயிஸம்' என்பவற்றை எல்லாம் தாண்டி குற்றவாளியை எப்படி விஞ்ஞான முறைப்படி கவ்விப் பிடிக்கலாம் என்று சொல்லித் தருகிறது படம்.
முழுவதும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையில் (முக்கிய குற்ற வாளியின் வேலைக்காரன் விடயத்தில் சாதாரண பொலிஸ்காரர் வேலையை அவர்களும் காட்டுகின்றனர்.) குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதுதான் கதை.

குற்றவாளி பெரிய தொழிலதிபர். இளைஞர்களைக் கடத்தி ஓரினச் சேர்க் கைக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்கிறார். சகோதரியும் வேலைக்காரனும் இவனுக்கு உடந்தை.

தமிழ் சினிமாவின் 'சஸ்பென்ஸே' இல்லாமல் படத்தின் நடுப்பகுதிக்கு முன்பாகவே குற்றவாளி அடையாளம் காட்டப்பட்டு விடுகின்றான். அவனைக் குறிவைக்கும் பொலிஸ் ஆதாரங்களைத் திரட்டி எப்படி அவனை நீதியின் முன் நிறுத்துகின்றது என்பதுதான் மீதிக் கதை.

கல்லூரியின் பேராசரியர்களும் விரைவுரையாளர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும் மாணவர்களுமே இந்தத் திரைப்படத்தில் எல்லாமும். 70 வீதமான படம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சூழலிற்குள்ளேயே பட மாக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு தரமான ஒரு படைப்பைத் தந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாத் துறையினர் தொடுவதற்கே பயப் படும் ஒரு விடயத்திற்குள் புகுந்து விறுவிறுப்பாக ஒன்றரை மணிநேரப் படத்தைத் தந்திருப்பதில் அவர்களுக்கு முழு வெற்றி.

வெளியிட்ட ''சில மாதங்களில் 10இ000 பிரதிகள் விற்றுள்ளன'' என்கிறார் பேராசிரியர் அம்ரித்ராஜ். எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தொடர்பியல் துறையின் தலைவர் அவர். ''சும்மா சம்மர் லீவில ஒரு படம் பண்ணலாம்னு புறப்பட்டோம். இப்போது அது இவ்வளவு பெரிய விஷயமாயிடிச்சு'' என்கிறார் பூரிப்புடன். (கீழே பார்க்க அவரது பேட்டி)
இந்தப் படத்திற்கு எல்லாப் பத்திரிகைகளும் இணையத் தளங்களும் பாராட்டை வாரிக் குவித்திருக்கின்றன. 45 பத்திரிகைகளில் விமர்சனங் கள்இ கட்டுரைகள்இ செய்திகள் வெளிவந்திருக்கின்றன. வெளிநாட்டு இணையத் தளங்கள் உட்பட பல தளங்கள் வித்தியாசமான முயற்சி என்று பாராட்டி ஆக்கங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தக் கதையையே ''சினிமாவா எடுத்திருந்தா 3 கோடி ரூபா லாபம் பாத்திருப்பேன் சார்'' என்று ரஜனியின் 'சிவாஜி' படத்தை சென்னையில் வெளியிட்ட விநியோகத்தர் அபிராமி ராமநாதன் தெரிவித்திருக்கிறா ராம்.
6 மாதங்களா பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த பயன் இது என்கிறார் பேரா சிரியர் பாலாஜி. ''காலேஜையே கட்டிக் கிட்டு அழுங்க'' என்று வீட்டி லுள்ளவர்கள் எல்லாம் சண்டைபோடப்போட நாங்கள் பட்ட கஷ்டத் திற்கு எங்களுக்கு முழு வெற்றி கிடைத்திருக்கிறது என்கிறார். இவர்தான் படத்தின் முக்கிய கதாபாத் திரத்திலும் நடித்துள்ளார். (கீழே பார்க்க அவரது பேட்டி)
உலகின் இரண்டாவது இறுவட்டு (CD) தயாரிப்பு நிறுவனமான மோஸ பியர் இந்தப் படத்தை இறுவட்டுக்களாக வெளியிட்டுள்ளார்கள். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள திரைப்படமல்லாத ஒரே படமும் இது தானாம். உலகெங்கிருக்கும் தமிழர்களும் இணையத்தின் மூலம் இதனை வாங்கிக்கொள்ள முடியும்.

ஓரினச் சேர்க்கை பற்றி இந்தியச் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பிரிவு 377 என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் கள். கமராவைப் பார்த்து விரல் நீட்டி ஆவேசமாக வாய்ச் சவடால் விடும் ஹீரோக்களுக்கு மத்தியில் சாதாரண உரையாடல்கள்இ இயல் பான நடிப்பு என்று அசத்தியிருக்கிறார்கள். அத்தோடு மக்களையும் கவர்ந்திருக்கிறார்கள்.
படத்தின் உச்சக்கட்டத்தில் குற்றவாளி தனக்கு 'மள்டிபிள் பர்ஸனா லிட்டி டிஸார்டர்' இருப்பதாகவும் அதனால் தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடி னாலும் தண்டனை வழங்கப்படுவதாகக் காட்டிப்பட்டிருப்பது சிறந்தது.
அதேசமயத்தில் குற்றவாளிக்கு உடந்தை யாக இருந்த அவரது சகோதரி போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவிக்கப்படுகிறார். சாட்சிகள் இல்லாத தனால் மட்டுமே ஒருவர் குற்றவாளி இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்வியை இங்கு இயக்குனர் முன்வைக்கிறார். அதன் மூலம் கதைக்கு ஒரு திறந்த முடிவையும் கொடுத்திருக்கிறார்.

திடீர் திருப்பங்களோ அதிரடியான மாற்றங்களோ இல்லாமல் படம் ஒரே சீராகச் சென்றிருப்பது சிறிது சோர்வைத் தந்தாலும் தமது வித்தியாசமான அணுகுமுறைகளால் வெற்றி பெற்றிருக்கிறார்கள் இயக்குனரும் நடிகர்களும்.
அதிகம் பேசப்படாத ஒரு விடயத்தை எடுத்து சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கும் எஸ்ஆர்எம் பேராசிரியர்கள்இ மாணவர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.

தொலைக்காட்சிப் படங்களுக்கான வழியையும் அவர்கள் இப்போது திறந்து விட்டுள்ளார்கள். வருங்காலத்தில் இதுவே ஒரு பெரும் வர்த்த கமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நடிகர்கள்தான் எமக்குப் பெரிய சாவால்!
(பேராசிரியர் அம்ரித்ராஜ் ஞானம் அவர்களுடனான செவ்வி.)

? : இப்படி ஒரு படம் பண்ணும் எண்ணம் எப்படி வந்தது?
! : மாணவர்களுக்குப் பாடத்தை கற்றுக் கொடுப்பதை மட்டும் செய்வதைவிட செய்முறையாகக் காட்டுவது பயனுள்ளது என்று சிந்தித்தோம். அதன் விளைவே இந்தப் படம். அனுபவம்தான் எப்போதுமே பயனுள்ள கற்கை. அதுவே நிலைத்தும் நிற்கும்.

? : எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
! : நடிகர்கள்தான் எமக்குப் பெரிய சவால். பாலாஜியைத் தவிர யாருக்கும் நடிப்பில் பயிற்சியோ தேர்ச்சியோ இல்லை. அதைச் சரிப்படுத்த 'மெதேட் அக்டிங்' எனப்படும் யதார்த்த நடிப்பு முறை யைப் பின்பற்றி னோம். மற்றவர்கள் பேசவே பயப்படும் கதையில் நடிப்பதற்கு பலரும் பயந்தனர். அது இரண்டாவது பெரிய பிரச்சினை. தமது பெயர் கெட்டு விடும் என்று அவர்கள் அஞ்சினர். நடித்த சிலர் இடையில் விலகினர். கெஞ்சிக் கூத்தாடி இறுதிக் கட்டப் படப்படிப்பை நடத்திய நிலையும்கூட உண்டு. மற்றப்படி பல்கலைக்கழகத்தில் எம்மிடம் இருந்த உபகரணங்களையும் வசதிகளையும் கொண்டே படத்தை முடித்துவிட்டோம்.

? : படத்தைத் தயாரிக்க எவ்வளவு காலம் சென்றது?
! : 2004ஆம் ஆண்டு மே மாத ஆரம்பத்தில் ப+ஜை போட்டோம். நவம் பருக்குள் 60 வீதமான படத்தை முடித்து விட்டோம். மீதியை முடிப்ப தற்கு 6 மாத காலம் இழுத்து விட்டது. கோடை விடுமுறைக் காலம் என்பதால் முதல் பாதி விரைவில் முடிந்தது. கல்லூரிகளின் கற்கை நெறிக்கு மத்தியில் மிகுதியை முடிக்க வேண்டி இருந்ததால் அதிக காலமானது. மாணவர் கற்றலைப் பாதிக்காமல் கல்லூரி முடிந்த பின் னரே எமது வேலையைத் தொடர்ந்தோம்.

? : எவ்வளவு பணம் போட்டீர்கள்?
! : எல்லாச் செலவுகளுக்குமாக 2 லட்சம் ரூபா போயிருக்கும். ஆனால் அதற்கும் மேலான பணம் விற்பனை மூலம் எமக்குத் திரும்பக் கிடைத் துள்ளது. அதுதான் வெற்றி.

? : இத்தகைய ஒரு புதிய முயற்சிக்கு வரவேற்பு எப்படி?
! : முதலில் தொலைக்காட்சிகளை அணுகினோம். அவர்கள் படத்தை வெளியிடத் துணியவில்லை. பின்னர் 'மோஸபியர்' நிறுவனத்தை அணுகினோம். அவர்கள் மும்பைக்காரர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்வத்துடன் பெற்று வெளியிட்டார்கள். இப்போது விற் பனையில் சக்கைபோடு போடுகிறது. அதில் ஒரு பங்கு எமக்குக் கிடைக்கும். அதற்கான 'செக்'குகள்கூட எமக்கு வர ஆரம்பித்து விட்டன. இதுவரை 10இ000 மேற்பட்ட பிரதிகள் விற்றுத் தீர்த்து விட்டன.

சினிமாவுக்கு அழைக்கிறார்கள்!
எஸ்ஆர்எம் காட்சித் தகவலியல் மற்றும் மின்னணு ஊடகவியல் துறை இணைப்பாளர்இ நடிகர் பாலாஜி அவர்களுடனான செவ்வி.

? : இப்படி ஒரு பாத்திரத்தை செய்ய எப்படித் துணிந்தீர்கள்?
! : எல்லோரும் செய்ததையே செய்ததைவிட வித்தியாசமாகச் செய்வதில்தானே சவாலே இருக்கின்றது.

? : எத்தயை சவால்களை எதிர்கொண்டீர்கள்?
! : எனது பாத்திரம் எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்வதற்கு அல்லது பார்ப்பதற்கு எதுவுமே இருக்கவில்லை. இத்தைகைய ஒரு நடிப்பை இதற்கு முன்னர் எந்த நடிகரும் வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதுவே எனக்குப் பெரிய சவால். நானே தேடினேன். அரவாணிகளைக் கூர்ந்து கவனித்து அவர்களிடமிருந்து சில பாவங்களை எடுத்தேன். அந்தப் பாத்திரத்தை கச்சிதமாகவும் ஆபாசமில்லாததாகவும் கொண்டு வருவதற்கு மிகச் சிரமப்படவேண்டியிருந்தது.

? : நடிக்கும் போது எப்படி இருந்தது?
! : ஓரினச் சேர்க்கை பற்றிய காட்சி எடுத்தபோது அந்த அறையில் ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேருக்கு மேல் இருக்கக்கூடாதென ஆரம் பத்திலேயே சொல்லிவிட்டேன். ஒளிப்பதிவாளரைக் கூட தூரத்தில் இருந்து 'டெலி லென்ஸ்' மூலம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். என்பக்கத்தில் யாரும் இருப்பதான உணர்வு எனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக.

? : படம் வெளியான பின்பு வரவேற்பு எப்படி இருந்தது?
! : சில இடங்களில் பாத்திரமாகவே பார்த்தார்கள். கிண்டலடித்தார்கள். சினிமா வட்டாரங்களில் நிறையவே பாராட்டினார்கள். கமல் 'வேட்டை யாடு விளையாடு' எடுத்தபோது அதற்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்க்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் அவரிடம் கூறினார் என்றும் அறிந்தோம்.

? : இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏதாவது சினிமா வாய்ப்புக்கள் வந்த னவா?
! : ஆமாம். (சந்தோஷமாகச் சிரிக்கிறார்) 'அரசி' தொடரில் ஏற்கனவே 3 'எபிசோட்களில்' வந்திருக்கிறேன். விரைவில் வெளிவர இருக்கும் 'காலைப்பனி' என்ற திரைப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித் திருக்கிறேன். 'சமுத்திரக்கனி' என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். வேறு பல படவாய்ப்புக்களும் வருகின்றன.

? : எப்போது ஹீரோ ஆகிறீர்கள்?
! : (வாய்விட்டுப் பெரிதாகச் சிரிக்கிறார்) ஐயையோ அதெல்லாம் வேண் டாம். கதாநாயகன் ஆகிவிட்டால் ஒரு வட்டத்திற்குள் நின்றே நடிக்க வேண்டியிருக்கும். வேறுவேறுவேறு கதாபாத்திரங்கள் செய்யம்போது நடிப் பிற்கு நிறையத் தீனி கிடைக்கின்றது.

? : படத்திற்கு திறந்த முடிவு (Open end) கொடுத்திருக்கிறீர்களே மற் றொரு படமும் வருமா?
! : வழக்கமாக தமிழ் படங்களில் சுபம் போட்டு முடிப்பார்கள். அதி லிருந்து வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படிச் செய்தோம். ஆனாலும் 377 பகுதி II எடுக்கும் யோசனையும் இருக்கிறது.

No comments: