எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். 24 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். துடிதுடிப்பும் சுறுசுறுப்பும் உள்ளவர்கள் என்பதுடன் படிப்பில் கெட்டிகளும் கூட. விடயம் என்ன வென்றால் அவர்களில் ஒருவர் நேற்று என்னிடத்தில் கேட்டார் ''எங்கள் ஈயத் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள்'' என்று. அவர் வாய்தவறி ''ஈயத் தமிழர்கள்'' உச்சரிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படித்தான் தமிழ் தெரிந்திருந்தது. மற்றொருவர் என்னிடத்தில் கேட்டார் 'சிலோன்' என்பது 'சிறீ லங்கா'விற்குள் இருக்கும் ஒரு இடமா? என்று.
ஒருபுறத்தில் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் பழ நெடுமாறன். மற்றொரு புறத்தில் இளைஞர்கள் சிலருக்கு ஈயமா ஈழமா என்பதும் தெரியவில்லை. சிலோனுக்கும் சிறீலங்காவிற்கும் வித்தியாசமும் புரியவில்லை. என்ன குஷ்டமடா, (சாரி அவர்கள் மாதிரியே வந்துவிட்டது) கஷ்டமடா சாமி!
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment