கொஞ்சம் பனி கொட்டினாலே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும் நம் மத்தியில் இந்த மனிதர் முழு பனிக்கட்டிகளுக்குள்ளே ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருந்து சாதனை படைத்திருக்கிறார். பனி மனிதன் ('The Iceman) என்று செல்லமாக அழைக்கப்படும் விம் ஹொவ் (Wim Hof) நெதர்லாந்து நாட்டுக்காரர். ஜனவரி 26ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ரொபின் அரும்பொருட்காட்சியகத்தின் முன்னால் தன்னுடைய முன்னைய சாதனையை முறியடித்து ஒரு மணி 12 நிமிடங்கள் பனிக்கட்டிகளுக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார் இந்த மனிதர்.
தனது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தி வைத்திருக்கக் கூடிய மந்திர தந்திரங்களை கற்றிந்து வைத்திருப்பதால் அவருக்கு இந்த சாதனை கைவந்திருக்கிறது. திபெத்தியர் அல்லாமல் இந்தக் கலை கைவரப்பெற்ற ஒரேயொரு வேற்றுநாட்டவர் இவர்தானாம்.
Sunday, March 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment